அஜீத்துடன் பைக் ரைட் போன மஞ்சு வாரியர்!

Filed under: சினிமா |

நடிகர் அஜீத்துடன் முதன் முறையாக பைக் ரைட் சென்ற மஞ்சு வாரியார் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

நடிகர் அஜித் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், பைக்கில் லாங் ரைடு செல்வதை தனது பொழுதுபோக்காக வைத்துள்ளார். “வலிமை” படத்திற்கு பிறகு தற்போது அஜீத் மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே லடாக் லாங் பைக் ரைடு சென்ற அஜீத்குமாருடன், நடிகை மஞ்சு வாரியரும் பைக் ஓட்டி சென்றுள்ளார். இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இப்பயணம் பற்றிய தனது அனுபவம் குறித்து பேசிய நடிகை மஞ்சு வாரியர் “எங்கள் சூப்பர் ஸ்டார் ரைடர் அஜீத்குமார் சாருக்கு மனமார்ந்த நன்றிகள்! எனது முதல் இரு சக்கர வாகனப் பயணத்திற்காக அட்வென்ச்சர் ரைடர்ஸ் இந்தியாவில் இணைவதில் பெருமை அடைகிறேன்! என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அஜீத் சார். சுப்ரஜ் மற்றும் சர்தார் சர்பாஸ் கானுக்கும் இணைந்ததற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.