அஜீத் பட நடிகர் டுவிட்டரில் பதிவு!

Filed under: சினிமா |

நடிகர் அஜீத்தின் “துணிவு” திரைப்படத்தில் உடன் நடிக்கும் நடிகர் டுவிட்டரில் படத்தை பற்றி பதிவிட்டுள்ளதால் அஜீத்தின் ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.

எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜீத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “அஜித்- 61.” இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அஜீத் 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு ‘துணிவு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று ‘துணிவு’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் அஜீத் அட்டகாசமாக இருக்கும் காட்சி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.இப்படத்தின் அஜீத்துடன் இணைந்து நடித்துள்ள நடிகர் சமுத்திரகனி, தனது டுவிட்டர் பக்கத்தில், “துணிவு வெல்வோம்” எனப் பதிவிட்டுள்ளார்.