கனவு நனவானது: ஜி.வி.பிரகாஷின் முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம்!

Filed under: சினிமா |

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இசையமைப்பாளராகவும் இருப்பவர் ஜிவி பிரகாஷ். இவர் ஒன்பது படங்களில் நடித்து வருகிறார். அதில் சில படங்களில் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷின் முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் தயாராகி வருகிறது. இதை பற்றி அவரின் ட்விட்டர் பதிவில்; என்னுடைய முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் வந்துகொண்டிருக்கிறது. ஒரு கனவு எனக்கு நனவாக போகிறது. “கோல்ட்நைட்ஸ்” என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆல்பத்தின் முதல் சிங்கிள் செப்டம்பர் 17 அன்று வெளியாகும். உங்களின் அன்பும் ஆசீர்வாதமும் தேவை என பதிவிட்டுள்ளார்.

இந்த ஆல்பத்துக்கு ஜீவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இதில் பிரபல கனடா நாட்டின் பாடகி ஜூலியா கர்தா பாடியுள்ளார். ஜிவி-யின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.