அடுத்து வரும் 3 நாட்களுக்கு கனமழை!

Filed under: தமிழகம் |

வானிலை மையம் தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் அளித்துள்ளது.

மாண்டஸ் புயல் சென்னையிலிருந்து 620 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்ககூடும் என்றும், இதனால் தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் மாண்டஸ் புயலின் வேகம் மணிக்கு 6 கிமீ வேகத்திலிருந்து 11 கிமீ ஆக அதிகரித்துள்ளது. எனவே நாளை நள்ளிரவில் புதுச்சேரியிலிருந்து ஸ்ரீகரிகோட்டா இடையே மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் என தெரிவித்துள்ளது. இதனால், தமிழகக் கடற்கரை பகுதிகளில் 75கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்; தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் டெல்டா பகுதியில் இன்று மிக கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.