இன்று கல்வித்தந்தை கர்மவீரர் காமராஜரின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் இ.பி.எஸ், துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் அஞ்சலி!

Filed under: தமிழகம் |

இன்று கல்வித்தந்தை கர்மவீரர் காமராஜரின் 45 வது நினைவு நாளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அவருக்கு
மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தற்போது காமராஜரின் நினைவு நாளில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவரின் புகழை குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பதிவில்; தம் வாழ்நாள் முழுமையையும் சமூகத் தொண்டாற்றுவதற்காகவே அர்ப்பணித்து தமிழகத்தை நாடே போற்றத்தக்க வகையில் உயர்த்திட்ட கல்வித்தந்தை பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவுநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வமின் பதிவில்; நேர்மை, எளிமையின் திருவுருவம் கல்விக்கண் திறந்த கர்மவீரர் பட்டிதொட்டி எங்கும் பள்ளிகள் தந்த கல்வி வள்ளல் வறியவர் வாழ்வில் ஒளியேற்றிய கலங்கரை விளக்கம் காமராசர் அவர்களின் நினைவுநாளில் பெருந்தலைவர் அவர்களை போற்றி அவர் வழியில் ஏழைகளை வாழ்வில் உயர்த்துவோம் என பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு இருவரும் பதிவிட்டுள்ளனார்.