அடுத்த உத்தரவு வெளியாகும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் : தமிழக அரசு

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை : தமிழகத்தில் அடுத்த உத்தரவு வெளியாகும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய அரசு வெளியிட்ட ஆணையின் படி எந்தெந்த புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பதை பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதற்கென, மாநில அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமித்து உள்ளது. அந்தகுழு, தன் முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, அதனுடைய முதற்கட்ட ஆலோசனைகளை முதலமைச்சர் பழனிசாமியிடம் நாளை ( 20/04/2020) தெரிவிக்க உள்ளது. 

இந்தக் குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து முதலமைச்சர் பழனிசாமி முடிவெடுக்க உள்ளார். எனவே, இது குறித்து தமிழக அரசு ஆணைகள் வெளியிடும் வரை, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என அரசு தெரிவித்துள்ளது.