அடுத்த படத்தை தமிழில் இயக்கும் அல்போன்ஸ்!

Filed under: சினிமா |

7 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய கோல்டு திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்றது.

இவர் “நேரம்“ மற்றும் “பிரேமம்“ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். “கோல்டு” திரைப்படம் எவ்வித புரமோஷனும் இல்லாமல் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. ஆனால் மிகவும் எதிர்பார்த்த இப்படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் அதிருப்தி அடையச் செய்துள்ளது. ரசிகர்கள் தங்களுக்கு படம் சுத்தமாக பிடிக்கவில்லை என சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பரப்பின. விமர்சனங்களைக் கடந்து செல்லாமல் அதற்கு பதிலளிக்கிறேன் என சமூகவலைதளங்களில் அல்போன்ஸ் கருத்துகள் பதிவிட்டார். இக்கருத்து பரும் சர்ச்சையைக் கிளப்பின. இப்போது அல்போன்ஸ் தனது அடுத்த படத்தை தமிழில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இது ஒரு காதல் படம் என்றும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.