அடுத்த 3 நாட்களுக்கு மழை!

Filed under: தமிழகம் |

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக நீலகிரி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல், கரூர், கோவை, திருப்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கலில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின் படி தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.