கேல் ரத்னா விருது பெற போகும் மாரியப்பன் தங்கவேலுக்கு பா.ஜ.க தலைவர் டாக்டர் எல்.முருகன் பாராட்டு!

Filed under: தமிழகம் |

கேல் ரத்னா விருது பெறும் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் எல். முருகன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதை பற்றி அவர் கூறியது; விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான கேல் ரத்னா விருதானது, 2016ல் ரியோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சார்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.

வீரர் மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது சார்பிலும் தமிழக பாஜக தொண்டர்கள், தலைவர்கள் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் தமிழையும், தமிழர்களையும் கௌரவப்படுத்தும் நமது பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு, விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கும் நேரத்தில் நம் மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாரியப்பன் அவர்களோடு, இதே விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட இதர இந்திய வீரர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.