அணுவை தத்து எடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்!

Filed under: சினிமா |

வண்டலூர் பூங்காவில் சுமார் 2,700 விலங்குகள் உள்ளன. இப்பூங்காவில் உள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக ‘விலங்குதத்தெடுப்பு’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் ‘அனு’ என்னும் வெள்ளைப் புலியை மே முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 4 மாதங்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தத்து எடுத்துள்ளார்.

2018-ம் ஆண்டு முதல் இப்புலியை தொடர்ந்து தத்தெடுத்து வருகிறார். இப் பூங்காவில் ‘அனு’ புலியுடன் சேர்த்து மொத்தம் 14 வெள்ளைப்புலிகள் உள்ளன.