அண்ணாமலை மீது புகார்!

Filed under: தமிழகம் |

பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை வாழ்த்தி பதிவிட்டிருந்தார். அப்பதிவில் குறிப்பிட்டுள்ள வார்த்தை பட்டியலின மக்களை இழிவுபடுத்தியுள்ளதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவ்வகையில் தமிழகத்தின் பாஜக தலைவர் அண்ணாமலையும் பிரதமர் மோடியை வாழ்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதவிட்டிருந்தார்.

அப்பதிவில் ஆங்கில வார்த்தையான Pariah என்ற வார்த்தையை குறிப்பிட்டிருந்தார். இந்த வார்த்தை பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும், அந்த வார்த்தையை அவர் பயன்படுத்திதற்காக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரதமரை புகழ்வதற்காக பட்டியலின மக்களை இழிவுப்படுத்தும் வகையில் அண்ணாமலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாக பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த குமரன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.