அண்ணா சாலையில் பைக் சாகசம்!

Filed under: சென்னை |

சென்னை அண்ணா சாலையில் இளைஞர்கள் பைக் சாகசம் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

இளைஞர்கள் சென்னை, கோயம்புத்தூர் உட்பட்ட பல முக்கிய நகரங்களில் இளைஞர்கள் ஆபத்தான முறையில் பைக் சாகசங்கள் செய்வது அதிகரித்துள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்கள், சாலையின் முக்கிய இடங்கள் நகரங்களிலும், போக்குவரத்து விதிகளை மீறியும், ஸ்டண்ட் போன்றவற்றில் ஈடுபடும் இளைஞர்களால் அதிகளவு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து காவல்துறை எச்சரிக்கை விடுக்கட்டிருக்கும் நிலையில், இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. காவல்துறையின் எச்சரிக்கையை மீறி, நேற்றிரவு அண்ணா சாலையில் இளைஞர்கள் சிலர் பைக் சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்கலில் வைரலாகி வருகிறது.