அதிக சம்பளப்பட்டியலில் முதலிடம் பிடித்த பாலிவுட் நடிகை!

Filed under: சினிமா |

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுன் இணைந்து “ஓம் சாந்தி ஓம்,” “பில்லு பார்பர்,” “பத்மாவத்,” சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் “கோச்சடையான்” போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் முன்னணி நடிகரும் காதலருமான ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் ஜான் ஆப்ரகாம் ஆகியோருடன் இணைந்து நடித்த “பதான்” திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து பாலிவுட் சினிமாவுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. “பதான்” பட ஹிட்டை அடுத்து, தீபிகா படுகோனின் சம்பளமும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தெலுங்கு இயக்குனர், நாக் அஷ்வின் இயக்கி வரும் புதிய படத்தில், தீபிகா படுகோனுக்கு ரூ.18 சம்பளம் என்ற தகவல் வெளியாகிறது. இப்படத்தில், அமிதாப் பச்சன், பிரபாஸ், திஷா பதானி ஆகியோரும் நடிக்கின்றனர். ரூ.500 கோடியில் தயாராகும் இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்தி சினிமாவில் அதிகம் சம்பளம் நடிகைகளில் தீபிகா படுகோன் முதலிடம் பிடித்துள்ளார்.