அதிமுகவில் இருந்து விலகிய கருணாஸ் திமுகவுடன் பேச்சுவார்த்தை!

Filed under: அரசியல் |

அதிமுகவில் இருந்து விலகிய கருணாஸ் திமுகவுடன் பேச்சுவார்த்தை!

சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுகவுடன் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் பேச்சுவார்த்தை.

இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். எங்கள் சமூகத்தை புறம் தள்ளுவதற்கு முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசும், என் சமூகம் சார்ந்த 8 அமைச்சர்களும் ஒன்றாக இணைந்து இந்த சமூகத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளார்கள் என குற்றசாட்டிருந்தார்.

இந்த பரபரப்பான சூழலில் வரும் சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுகவுடன் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.நேற்று முதற்கட்டமாக திமுக தொகுதி பங்கீட்டு குழு உறுப்பினருடன், கருணாஸை சார்ந்த உறுப்பினர்களும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.

இந்த கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முக்குலத்தோர் புலிப்படை பொறுத்தளவில் அவர்களுக்கு ஒரு இடம் ஒடுக்குவதற்கு திமுக முன்வந்திருப்பதாகவும், உதயசூரியன் சின்னத்தில் அவர்கள் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், முக்குலத்தோர் புலிப்படை தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என பல கோரிக்கைகளை திமுக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.