தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். தெலுங்கு மட்டுமல்லாமல் மற்ற மொழி உள்ள மாநிலங்களிலும் அதிக ரசிகர்கள் வைத்திருப்பவர். இதில் கேரளா மாநிலத்தில் இவருக்கு பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது.
தற்போது அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தன்னா.நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக தயாரித்து வருகின்றனர்.
இந்தப் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அவருக்கு பிசியான மற்றும் கால்சீட் காரணத்தினால் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.