அதிமுகவில் யாரும் தாயுள்ளத்தோடு இல்லை; சசிகலா

Filed under: அரசியல் |

சசிகலா எப்போது என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் எனத் தெரியும் என்று கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் அதிமுக கட்சியில் தற்போது நான்கு அணிகளாக பிரிந்துள்ளது. இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி மற்றும் டிடிவி தினகரன் அணி என நான்கு அணிகளாக பிரிந்திருக்கும் அதிமுகவை ஒன்றிணைக்க சசிகலா முழுமுயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அதிமுகவை ஒன்றிணைக்க என்ன முயற்சி மேற்கொள்ளப்படும்? எப்போது முயற்சி மேற்கொள்ளப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த சசிகலா, “அதிமுக என்ற கட்சியை ஒருமைப்படுத்த எப்போது என்ன செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என எனக்கு தெரியும். எம்ஜிஆர் மறைந்த பிறகு ஜானகி அணி மற்றும் ஜெயலலிதா அணி என இரு அணியாக இருந்த அதிமுகவை ஒற்றுமையாக மாற்றியது நான் தான். அப்படிப்பட்ட எனக்கு இப்போதுள்ள அதிமுகவை ஒருமைப்படுத்துவது எப்படி என்று எனக்கு தெரியும். அதிமுகவில் தாய் உள்ளத்தோடு தற்போது யாருமில்லை” என்று அவர் கூறினார்.