அதிமுகவில் 5 இடங்கள் கோரிய புதிய நீதிக் கட்சி!
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட புதிய நீதிக் கட்சி தயாராக உள்ளது என கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணி விவராகத்தில் மும்புரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளுடன் மற்ற கட்சிகள் கூட்டணி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. அந்தவகையில் அதிமுகவில் இதுவரை பாஜகவிற்கு 20 சட்டப்பேரவைத் தொகுதிகளும் ஒரு நாடாளுமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாமகவிற்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. தேமுதிக உள்ளிட்ட மற்ற சில கட்சிகளுடன் உடன்படுக்கை எட்டவில்லை.
இந்நிலையில் சென்னையில் அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் புதிய நீதிக் கட்சிஈடுபட்டது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் எனத் தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாணக்கியதனத்துடன் அரசியலில் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், புதிய நீதி கட்சி சார்பில் ஐந்து இடங்கள் கேட்கப்பட்டுள்ளதாகவும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார் என்றும் கூறினார்.