அதிமுக அவரச செயற்குழு கூட்டம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

ஏற்கனவே அதிமுக செயற்குழு கூட்டம் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போது அவசர செயற்குழு கூட்டம் குறித்த தேதியை அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 7ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின்னர் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் இந்த அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.