அதிமுக மாநாட்டில் ரூ.100, ரூ.500 விநியோகமா?

Filed under: அரசியல்,தமிழகம் |

நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மதுரையில் அதிமுக மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. மாநாட்டில், 51 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றி வைத்தார்.

பெருமளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இம்மாநாட்டிற்கு 3 லட்சம் அதிமுக தொண்டர்கள் வருகை தந்திருந்ததாக தகவல் வெளியாகிறது. மாநாட்டிற்கு முன்பு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ரஜினி ரசிகர்களை மதுரை மாநாட்டிற்கு வரவழைக்க, “ஜெயிலர்” திரைப்பட டிக்கெட்டிகள் இலவசமாக வழங்கியிருந்தார். இது பரபரப்பாக பேசப்பட்டது. மதுரை அதிமுக மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது. மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு ரூ.100, ரூ 500 ஆகியவகை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், மாநாட்டிற்கு வந்த தொண்டர்களுக்கு தயாரிக்கப்பட்ட புளியோதரை வேகாததாலும், ருசியாக இல்லாததாலும், தொண்டர்கள் சாப்பிடவில்லை என தெரிகிறது. அதனால் அவை டன் கணக்கில் கீழே கொட்டப்பட்டது.