“அதிமுக வென்றால் இலவச வாஷிங் மெஷின்” அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

Filed under: அரசியல்,தமிழகம் |

சசிகலாவுக்கும், தினகரனுக்கும் அதிமுகவில் எந்த உரிமையும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்நிலையில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் அதிமுகவில் சசிகலா, தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை. உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளது . போகிற வருபவர்கள் எல்லாம் வழக்கு போட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “புதுச்சேரி நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக அதிமுக வாக்கு அளிக்கும் . முதல்வர் நாராயணசாமி ராகுல் காந்தியிடம் மாற்றி மொழி பெயர்த்தது வருத்தமளிக்கிறது. உங்களைப்போன்று நானும் அதை பார்த்தேன். மொழிப்பெயர்ப்பு என்பது ஒரு கலை.

அதை தெரிந்தவர்கள் மட்டுமே செய்ய வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவரிடம் அதிமுக தேர்தல் அறிக்கையில் வாஷிங் மெஷின் தருவதாக உள்ளதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதிமுக அறிக்கையில் இலவச வாசிங்மிஷின் தருவதாக உள்ளது உண்மை இல்லை” என்றார்.