அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை..!

Filed under: உலகம் |

அமெரிக்கர்கள் சூடான் நாட்டிலிருந்து 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு உள்நாட்டு போர் மூண்டுள்ளதை அடுத்து அங்குள்ள இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். சூடான் நாட்டில் வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்தில் வெளியேறுங்கள் என வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. சூடானில் தற்போதைய நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் இரு தரப்பினரும் போரை நிறுத்த இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றும் எனவே உடனடியாக அங்குள்ள அமெரிக்கர்கள் வெளியேற வேண்டும் என்றும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் சூடானில் உள்ள இந்தியர்கள் மீட்கப்பட்டு வந்தனர்.