சீனாவின் சவாலைகளை எதிர்கொள்ளவதற்கு இந்தியா ராணுவம் தயார் – தளபதி நரவானே!

Filed under: இந்தியா |

சீனா எல்லையில் எந்த விதமான சவால்களையும் எதிர்கொள்வதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக ராணுவ தளபதி நரவானே தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் பயணமாக லடாக் சென்ற ராணுவ தளபதி நரவானே, லே நகரில் இருக்கும் ராணுவ முகாமில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். எல்லைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் தயார் நிலை பற்றியும் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

இதன் பின்பு நிருபர்களிடம் பேசிய தளபதி நரவானே; சீனா நாட்டின் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. நம் நாட்டின் பாதுகாப்புக்காக எல்லைப் பகுதியில் முன்னெச்சரிக்கை காரணமாக பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். பல இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.

எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்கள் மன உறுதியுடன் இருக்கின்றனர் எனவும் சீனாவின் எந்த ஒரு சவால்களை சந்திப்பதற்கு ராணுவ வீரர்கள் தயாராக உள்ளனர் எனவும் ராணுவத் தளபதி நரவானே தெரிவித்தார்.

மேலும், சீனாவுடன் நிலவும் பதற்றத்தை தணிக்க ராணுவ மற்றும் ராஜங்க ரீதியிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.