அமெரிக்காவின் புளோரிடாவில் அதிரடி மசோதா!

Filed under: உலகம் |

உலகத்தில் சமூக வலைதளம் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இந்த சமூக வலைதளங்களால் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சிலர் பாதிக்கப்படுகின்றனர். அவ்வகையில் 15 வயதிற்கும் குறைவானவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை என்ற மசோதாவை அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் அமல்படுத்தி உள்ளது. அந்த மாகாணத்தில் உள்ள 15 வயதுக்கு குறைவான சிறுவர்கள் இனி சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாது என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 15 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க கோரிய மசோதாவிற்கு அம்மாகாண ஆளுனர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் 15 வயதுடைய குழந்தைகள் பெற்றோரின் அனுமதியுடன் சமூக வலைதளங்களில் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்று அமெரிக்கா முழுவதும் விரைவில் மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது. சிறுவயதிலேயே குழந்தைகள் சமூக வலைதளங்களில் பயன்படுத்துவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாக உளவியல் நிபுணர்கள் கூறியதையடுத்து இம்மசோதா இயற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.