அமெரிக்கா எச்சரிக்கை!

Filed under: உலகம் |

வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து பல ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்து அணுகுண்டு சோதனையை மேற்கொள்ள போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி கடந்த சில ஆண்டுகளாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை சோதனை செய்து வருகின்றனர். இவ்வாறு சோதனை செய்யப்படும் ஏவுகணைகள் அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் எல்லை பகுதிக்குள் சென்று விழுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை வீசி வடகொரியா சோதனை செய்ததாக செய்திகள் வெளியாகின. வடகொரியாவுக்கு அழுத்தம் கொடுக்க தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகிறது. வடகொரியா அணு ஆயுதத்தை சோதித்து பார்க்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் நெட் ப்ரைஸ் இதுபற்றி கூறியபோது, வடகொரியா தனது அணுகுண்டு சோதனையை 7வது முறையாக நடத்த திட்டமிட்டு வருவதாகவும், அதற்கான இறுதிக்கட்டத்தை அது நெருங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இச்சோதனையை வடகொரியா மேற்கொண்டால் அது அந்த பிராந்தியத்தின் அமைதியை குலைப்பதாக அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.