ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு – ட்விட்டரில் பதிவு!

Filed under: உலகம் |

அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடன் அதிபர் வேட்பாளராகவும் மற்றும் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிடுகிறார்கள். இரு கட்சினரும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக ஆதரவை ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஜுமான்ஜி, ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஆகிய பிரமாண்ட படங்களில் நடித்த தி ராக் என அழைக்கப்படும் டுவைன் ஜான்சன் காணொலி காட்சியில் அமெரிக்கா அதிபர் தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் உடன் உரையாடல் நடத்தி அவருடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.

https://twitter.com/TheRock/status/1310198847835000834

இதைப் பற்றி அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.