அமெரிக்க எம்.பி.க்கள் பிரதமரிடம் ஆட்டோகிராபுக்கு போட்டி!

Filed under: அரசியல்,இந்தியா,உலகம் |

அமெரிக்காவில் உள்ள பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதன் பின் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க அமெரிக்க எம்பிகள் போட்டி போட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்க சென்றுள்ளார், அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்காவில் நாடாளுமன்ற கூட்டத்தில் அவர் பேசிய பின், அவரிடம் ஆட்டோகிராப் வாங்க அமெரிக்க எம்பிகள் போட்டி போட்டனர். பிரதமர் மோடி பொறுமையாக அனைத்து எம்பிகளுக்கும் கையெழுத்து போட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரை எந்த இந்திய பிரதமருக்கும் இல்லாத வகையில் பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றியதை அந்நாட்டு ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது.