அமெரிக்க தேர்தல் வரலாற்றிலேயே இவர் தான் அதிக ஓட்டு வாங்கியவராம்..

Filed under: Uncategory,அரசியல்,உலகம் |

இதுவரை அமெரிக்க வரலாற்றிலேயே அதிக வாக்குகளை பெற்று ஜோ பைடன் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்க வரலாற்றில், அதிக மக்கள் வாக்குகளை பெற்ற முதல் அதிபர் வேட்பாளர் என்ற பெருமை ஜோ பைடனுக்கு கிடைத்துள்ளது.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில், அதிபர் வேட்பாளர் ஜோ பைடனும், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் இருவரும் சேர்ந்து 7.2 கோடி வாக்குகளை பெற்றுள்ளனர்.

குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்புக்கு 6.86 கோடி வாக்குகள் கிடைத்துள்ளது.

12 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற பராக் ஒபாமா பெற்ற 6.95 கோடி வாக்குகளை விட தற்போது ஜோ பைடன் 26 லட்சம் வாக்குகளை கூடுதலாக பெற்று சாதனை படைத்துள்ளார்.