அமேசான் பிரைம் சந்தா தொகை உயர்வா?

Filed under: சினிமா |

ஓடிடி தளங்களில் ஒன்றான அமேசான் பிரைம் தனது சந்தா தொகையை உயர்த்தியுள்ளதையடுத்து பயனாளிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவ்வப்போது அமேசான் பிரைம் ஒடிடியில் தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் வெளியாகும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக தமிழில் பிரபல நடிகர்களின் படங்கள் அமேசான் பிரைம் ஓடிடியில் தான் வெளியாகி வருகின்றன. இந்தியாவில் குறுகிய கால பயன்பாட்டுக்கான சந்தா தொகையை அமேசான் பிரைம் உயர்த்தியுள்ளது. ஒரு மாத பயன்பாட்டு கட்டணம் ரூபாய் 179 என இருந்தது. தற்போது அது ரூ.299 ஆகவும் மூன்று மாத சந்தா கட்டணம் 459 ரூபாய் என இருந்தது. அது தற்போது ரூ.599 ஆகும் மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் ஒரு வருட சந்தா எந்த விதமான மாற்றமும் இன்றி ரூபாய் 1499 என தொடர்கிறது என அமேசான் பிரைம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.