அமைச்சர் உதயநிதியிடம் கோரிக்கை வைத்த மாணவி!

Filed under: அரசியல்,தமிழகம் |

அமைச்சர் உதயநிதியிடம் பி.டி.பீரியடில் வேறு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவிகள் கோரிக்கை வைத்தனர்.

நேற்று உதயநிதி ஸ்டாலின் தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இன்று அவர் சென்னையில் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது பள்ளி நாட்களில் பி.டி.பீரியடில் வேறு வகுப்புகள் எடுப்பதை கைவிட வேண்டும் என மாணவி ஒருவர் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பெரும்பாலான பள்ளிகளில் பி.டி.பீரியடை விளையாட்டிற்காக பயன்படுத்தப்படாமல் உள்ளது என்றும் அந்த பீரியடில் வேறு பாடங்கள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அமைச்சர் உதயநிதி விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.