அமைச்சர் காமராஜுக்கு சீரியஸ் !மருத்துவமனைக்கு படையெடுத்த ஈபிஎஸ், ஓபிஎஸ்

Filed under: அரசியல்,தமிழகம் |

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா நோய் தொற்றுக்காரணமாக கடந்த 5ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காத நிலையில், தொடர்ந்து இன்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று இரவு 8.05 மணியளவில் அரசு மருத்துவமனையில் இருந்து 15 நிமிடத்தில் செல்லக்கூடிய அமைந்தகரைள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எம்ஜிஎம் மருத்துமனை ஒன்பதாவது மாடியில் உள்ள எக்மோ வார்டில் அறை எண் 934 இல் அமைச்சர் காமராஜ்க்கு வென்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

அமைச்சர் காமராஜின் உடல்நிலை குறித்து கேட்டறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் எம்ஜிஆம் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

அமைச்சர் காமராஜுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்து வருகிறார்