அம்பத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் முதல்வர் திடீர் ஆய்வு!

Filed under: சென்னை |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அம்பத்தூரில் உள்ள டி1 போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று சென்னை, அம்பத்தூரில் டி1 போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், சட்ட ஒழுங்கு ஆய்வாளரின் அறையில் அமர்ந்து, பொதுமக்கள் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து காவல்துறையினரிடம் கேட்டறிந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.