அம்பானியின் வேலைவாய்ப்பு உறுதி!

Filed under: இந்தியா |

ரிலையன்ஸ் நிறுவனர் அம்பானி 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதியாக கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

இன்று ஆந்திராவில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது ஆந்திராவில் ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் ஐம்பதாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். மேலும் 20 செக்டர்களுக்கு 340 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.13 லட்சம் கோடி வரை ஆந்திராவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்த போது சுமார் ஆறு லட்சம் பேர்களுக்கு ஆந்திராவில் இந்த முதலீடு காரணமாக வேலை கிடைக்கும் என்று தெரிவித்தார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.