“அயலான்” படம் பற்றி புகழ்ந்த பிரபலம்!

Filed under: சினிமா |

‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் “அயலான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் சொல்லப்படுகிறது.

படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த படம் பைனான்ஸ் பிரச்சனைகளில் சிக்கி ரிலீசாகாமல் முடங்கிக் கிடக்கிறது. இப்போது 2023ம் ஆண்டு தீபாவளிக்கு இத்திரைப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரிலீஸ் வேலைகள் நடந்து வரும் நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ளார் படத்தொகுப்பாளர் ரூபன். ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் இதுபற்றி பேசியுள்ள அவர் “அயலான்” திரைப்படம் ரிலீசானால் கண்டிப்பாக 100 கோடி ரூபாய் வசூல் அள்ளும்” என நம்பிக்கையை தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டு தீபாவளிக்குக் கார்த்தியின் ஜப்பான், சிவகார்த்திகேயனின் “அயலான்” மற்றும் கார்த்திக் சுப்பராஜின் “ஜிகர்தண்டா 2” ஆகிய படங்கள் ரிலீசாகவுள்ளன.