அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சால் பரபரப்பு!

அரவிந்த் கெஜ்ரிவால், “மோடி மீண்டும் பிரதமரானால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை கைது செய்து விடுவார், அதற்கான திட்டம் இருக்கிறது” என்று பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அரவிந்த் கெஜ்ரிவால் டில்லி மதுபான வழக்கில் கைது செய்யப்பட்டு 50 நாட்கள் சிறையில் இருந்த நேற்று வெளியானார். இன்று நடந்த பிரம்மாண்டமான பேரணியில் அவர் பேசும்போது, “அனைத்து எதிர்கட்சி தலைவர்களையும் பிரதமர் மோடி கைது செய்வார், அவர் மீண்டும் பிரதமர் ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட ஒரு சில எதிர்க்கட்சி தலைவர்களை சிறையிலடைக்க திட்டமிட்டுள்ளார். இந்த தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றால் அடுத்த இரண்டு மாதங்களில் உத்தரப்பிரதேச முதலமைச்சரை மாற்றி விடுவார்கள். திருடர்கள் எல்லாம் பாஜக தங்கள் கட்சியில் வைத்துக்கொண்டு நல்லவர்களை சிறைக்கு அனுப்புகிறார்கள், அவர்களால் யாரை வேண்டுமானாலும் கைது செய்ய முடியும் என்பதை காட்டுவதற்காகவே அதிகாரத்தை பயன்படுத்திருக்கிறார்கள்.” அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.