அருணா ஜெகதீசன் அறிக்கைக்கு அண்ணாமலை கண்டனம்!

Filed under: அரசியல் |

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்த அருணா ஜெகதீசன் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் கடந்த சில வருடங்களாக விசாரணை செய்தது. சமீபத்தில் அந்த விசாரணை அறிக்கையை தமிழக முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. அறிக்கையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ரஜினிகாந்த் பேட்டியளித்தது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து பதிவு செய்யப்பட்டிருந்தது. அருணா ஜெகதீசன் அறிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும் போது, “தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்தது குறித்து விசாரணை அறிக்கையில் உள்ள கருத்துக்களை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நடிகர்கள் கருத்து தெரிவிக்கும்போது ரஜினிகாந்த் கருத்து தெரிவிப்பதில் தவறில்லை. நடிகர் ரஜினி கருத்து கூறுவதற்கு முழு உரிமை உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.