அறநிலையத் துறையில் நான்கு இணை ஆணையர்கள் அதிரடியாக பணியிட மாற்றம்!

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை, மே 24

தமிழக இந்து சமய அறநிலையத் துறையில் பணிபுரிந்து வந்த நான்கு இணை ஆணையர்கள் நேற்று 23/ 5 /2020vஅதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த திடீர் பணியிட மாற்றம் உத்தரவால் அறநிலையத்துறையில் பெரும் சலசலப்பை உருவாகியுள்ளது. 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இணை ஆணையராக கடந்த 6 வருடங்களாக கோலோச்சிக் கொண்டு வானளாவிய அதிகாரத்தோடு மீனாட்சி அம்மன் கோவிலில் வலம் வந்த நடராஜனை அதிரடியாக சேலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதைப்போல சென்னை, திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் பணிபுரிந்து வந்த செல்லத்துரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, சென்னை தலைமை இடத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தலைமையிடத்தில் பணிபுரிந்து வந்த லட்சுமணன் திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள செல்லதுரை ஏற்கனவே திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் துணை ஆணையராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அறநிலையத்துறையில் திடீரென நான்கு இணை ஆணையர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டது, துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மத்தியில் பெரும் சலசலப்பை உருவாகியுள்ளது.