அவதார் 2 வேற லெவல் புரொமோஷன்!

Filed under: உலகம்,சினிமா |

“அவதார் 2” ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகவுள்ள படத்திற்காக நயகரா நீர்வீழ்ச்சியில் நடத்தப்பட்ட பிரம்மாண்டமான புரோமோஷன் வைரலாகியுள்ளது.

2009ல் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி உலகம் முழுதும் மிகப்பெரும் வசூலை அள்ளி குவித்த படம் ‘அவதார்’. 12 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. ’அவதார்; தி வே ஆப் வாட்டர்’ என்ற இந்த படத்தின் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி டிரெயிலர்களும் நேற்று ஒரே நாளில் வெளியாகி பெரும் வைரலாகியுள்ளது. “அவதார்” படத்திற்காக பிரம்மாண்டமான புரொமோஷனை படக்குழுவினர் நயகரா நீர்வீழ்ச்சியில் நடத்தியுள்ளனர். விர்ச்சுவல் ரியாலிட்டியில் பிரம்மாண்டமாக ‘அவதார்; தி வே ஆப் வாட்டர் (கிஸ்ணீtணீக்ஷீ tலீமீ ஷ்ணீஹ் ஷீயீ ஷ்ணீtமீக்ஷீ)’ படத்தின் காட்சிகளை திரையிட்டுள்ளனர். மேலும் பல நூறு டுரோன்களை கொண்டு படத்தின் பெயரை நயகரா நீர்வீழ்ச்சிக்கு மேல் செட் செய்து காட்டினர். “அவதார்” படத்தை சிறப்பிக்கும் விதமாக நயகரா நீர்வீழ்ச்சி முழுவதும் நீல வண்ண விளக்குகளால் ஒளிர்ந்தது. இது பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.