அவர்கள் கொடுத்த அட்வைஸ்.. நூறுவாட்டி யோசித்த பிறகு.. அதிரடி முடிவெடுத்த சசிகலா !

Filed under: அரசியல்,தமிழகம் |

சென்னை: அதிமுக கொடியுடன் நேற்று சசிகலா ஆஸ்பத்திரியில் இருந்து கிளம்பி சென்ற செய்தியின் தாக்கம் இன்னமும் குறையவில்லை.

நேற்று மதியம் 12 மணிக்கு சசிகலா டிஸ்சார்ஜ் ஆனார்.. முன்னதாகவே, ஆஸ்பத்திரிக்கு வெளியே ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டு உற்சாக முழக்கமிட்டு வாழ்த்தி கொண்டிருந்தனர்..

அப்போதுதான் சசிகலா வெளியே வந்து அவருக்காக அங்கே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறினார். அதற்கு பின்னால், இன்னொரு காரில் டிடிவி தினகரன் செல்ல, மற்றோரும் பின்னாடியே காரில் கிளம்பி சென்றனர்.

ஜெயலலிதா

சசிகலா ஏறிச்சென்ற கார் ஜெயலலிதா உபயோகப்படுத்தியது என்று சொல்லப்படுகிறது..

அத்துடன் அதிமுக கொடியை காரில் பொருத்தியிருந்ததுதான் நேற்று முழுதும் பரபரப்பு செய்தியானது. அதிமுக வட்டாரே கொந்தளித்துவிட்டது. ஜெயக்குமார் ஒருபக்கம், சிவி சண்முகம் மறுபக்கம் என பேட்டிகளை தந்து ஆவேசமானார்கள்.. அதிமுக கொடியை பயன்படுத்தகூடாது என்பதையும் வலியுறுத்தினர்.

அதிமுக கொடி

டிஸ்சார்ஜ் ஆகி செல்பவர் எதற்காக அதிமுக கொடியை காரில் கட்டி கொண்டு செல்ல வேண்டும்? என்ற சந்தேகமும் பரவலாக எழுந்து வருகிறது.. டிஸ்சார்ஜ் பற்றி டாக்டர்கள் சொன்னதும், சசிகலாதான் அதிமுக கொடி பற்றின பேச்சை எடுத்தாராம்.. “டிஸ்சார்ஜ் ஆகி, நான் எந்த கார்ல வெளியே போறது… கொடிகட்டாத காரில் நான் இதுவரைக்கும் போனதே கிடையாதே..” என்று சொல்லவும்தான், அதுகுறித்து அவரது சட்ட ரீதியாக வக்கீல்களிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர்

“கைதாகும்போது, அதிமுகவின் பொதுச்செயலாளராகதான் இருந்தீர்கள்.. இப்பவும் அதைதான் நாம சொல்லிட்டே இருக்கோம்.,., அதனால் அதிமுக கொடியுடன் போனால்தான் சரியாக இருக்கும்.. இல்லாவிட்டால் நம் உரிமையை நாமே விட்டுத் தந்தது போலாகிவிடும்.. காரில் கொடியுடன் போனால் தொண்டர்களும் இதனால் பலமடங்கு உற்சாகமாவார்கள்” என்று சொல்லப்பட்டுள்ளது. அதன்பிறகுதான் அந்த காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டதாம்.. முன்னதாக, டிஸ்சார்ஜ் ஆகி செல்வதற்காக காரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து நிறுத்தியபோது கொடி எதுவும் அதில் கட்டப்படவில்லையாம்..

முதல் பந்து

வக்கீல்களுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பிறகே, அதிமுக கொடி கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.. “பொதுச் செயலாளரை யாரும் நீக்க முடியாது… சசிகலாதான் பொதுச் செயலாளராக இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்” என்று நச் பதிலை டிடிவி தினகரன் சொன்னதும் இதை மனதில் வைத்துதான் என்கிறார்கள். ஆக, ஆஸ்பத்திரியில் இருந்தே தனக்கான தன் வியூகத்தையும், அதிரடியையும் கிளப்பி கொண்டு வந்துள்ள சசிகலா, அதிமுக தலைமைக்கும் தன் முதல் பந்தை அடித்து திருப்பி விட்டுள்ளார் என்றே தெரிகிறது.