அ.தி.மு.க.வை நெருங்கிவரும் வைகோ – வாசன்!

Filed under: அரசியல்,தமிழகம் |

vaikoகர்நாடகம் ஓசூர் அருகே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டப்போவதாக முதலில் எச்சரித்தது நமது நெற்றிக்கண் இதழ்தான். அப்போது கண்டுகொள்ளாத தமிழக எதிர்க்கட்சிகள், மற்ற ஊடகங்கள் வெளியிட்ட பின்பு கொதித்து எழுகின்ற நிலையைக் கண்டு தமிழக மக்கள் நகைக்கிறார்கள். பா.ஜ.க., தி.மு.க., காங்கிரஸ் ஆகியவை கர்நாடகம் எடுக்கும் எந்த ஒரு தமிழக விரோத திட்டத்திற்கும் கடும் எதிர்ப்பை தெரிவிக்காது என்ற நம்பிக்கை தமிழர்களுக்கு உள்ளது. காரணம் அங்கு நிலவுகின்ற அரசியல் சூழ்நிலை மற்ற எதிர்கட்சிகளுக்கு தமிழகத்தில் கொதித்து எழவேண்டிய சூழ்நிலைகாரணம். எதிர்கால அரசியலுக்கு உதவும்.

முல்லைப்பெரியார் பிரச்னையில் இடது வலது கம்யூனிஸ்ட்டுகளின் தீவிர எதிர்ப்பை எதிர்பார்க்க முடியாது. காரணம் கேரள அரசியல் சூழ்நிலை ஆகமொத்தம் இலங்கை பிரச்னை, கர்நாடக பிரச்னை மற்றும் தமிழர்களின் நலத்திற்கு குரல்கொடுக்கும் ஒரே கட்சியாக அ.தி.மு.க.வை தமிழர்களின் குலம் எதிர்நோக்கி உள்ளது என்பது சுட்டெரிக்கும் உண்மை. வாசன், வைகோ ஆகியோர் அ.தி.மு.க.வுடன் ஒத்துழைக்கும் காலம் நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.

பா.ஜ.க.வில் நரேந்திர மோடியின் அதிரடி எழுச்சி பா.ஜ.க. சுயநல அரசியல்வாதிகளுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளதாம். இதனால் இந்து முன்னணியின் உதவியால் சிவசேனாவை உசுப்பி விட்டார்களாம். இலங்கை அதிபரை உசுப்பிவிட்டு, தமிழர்களை துன்புறுத்தினார்களாம். கர்நாடக அரசை உசுப்பிவிட்டு, தமிழர்களிடையே அணை பிரச்னையை உருவாக்கி உள்ளார்களாம். மேலும் தாஜ்மகால் இந்து கோவிலின் மீது கட்டப்பட்டது என்ற புதிய கண்டுபிடிப்பை தற்போது தெரிவித்து உ.பி.யில் பிரச்னையை ஏற்படுத்த முயலுகிறார்களாம். நரேந்திரமோடிக்கு பெருகி வரும் ஆதரவால் பா.ஜ.க. சுயநல அரசியல்வாதிகள் காங்கிரசுடன் கைகோர்க்கும் காலம் நெருங்கி வருகிறது என்று தலைநகர் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
தமிழக காங்கிரசில் உள்ள பல கீழ்மட்டத் தலைவர்கள் அதிக அளவில் நிதிகளை பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் காங்கிரசில் உலவுகிறது. தமிழக புறம்போக்கு நிலங்களை ஆக்ரமித்து, சோனியா காந்தியின் பெயரில் வணிக வளாகங்கள் கட்டி, பெரும் நிதிகளை கையாண்டு கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சாதி அடிப்படையில் அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் ஊராட்சித் தலைவர்களை மடக்கி நிதிகளை கொள்ளை அடித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

திருச்சி, கோவை, திருநெல்வேலி, வேலூர், சிட்லபாக்கம் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் தமிழக நிலங்கள் வட்டார காங்கிரஸ் தலைவர்களுக்கு தாரை வார்க்கப்பட்டதாக கடும் குற்றச்சாட்டு அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசு உடனடியாக தாரை வார்க்கப்பட்ட நிலங்களை மீட்டு, கொள்ளையடித்த நிதிகளை தமிழக அரசுடன் இணைக்கவேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள். பல சமூக நல அமைப்புகள் தற்போது அரசியல் தொடர்பு கொண்டு, தமிழக நிலங்களை கொள்ளையடிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஜெயலலிதா அதிரடி மந்திரிசபை மாற்றம் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு தலைநகரில் உலவுகிறது. வழக்குகளில் சிக்கியபின் பல அமைச்சர்கள் ஜெயலலிதாவை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்திய நிகழ்ச்சிகள், போயஸ் கார்டனுக்கு சென்றுள்ளதாக வதந்திகள் உலவுகின்றன.