நடிகை சமந்தா சமீபத்தில் மையோசிட்டிஸ் என்னும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து சிகிச்சைக்கு பின் மீண்டு வந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் “சகுந்தலம்“ திரைப்படம் ரிலீசானது. அடுத்து “குஷி” மற்றும் “சிட்டாடல்” ஆகிய திரைப்படங்கள் வரிசையாக ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன.
இப்போது சமந்தா ஒரு ஆங்கில படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்துக்கு “சென்னை ஸ்டோரி” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிறந்த ஆங்கில எழுத்தாளர் எழுதிய ‘அரேஞ்ச்மெண்ட் ஆஃப் லவ்” என்ற நாவலை ஒட்டி படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் ஹாலிவுட் நடிகர் நடிகர் விவேக் கல்ரா கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குநர் பிலிப் ஜான் இயக்க தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான குரு பிலிம்ஸ் தயாரிக்கிறது. படத்தில் சமந்தா துப்பறியும் நிபுணராக நடிக்கிறார்.