ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் சமந்தா!

Filed under: சினிமா |

நடிகை சமந்தா சமீபத்தில் அறிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையெடுத்து கொண்டுள்ளார். இதனால் அவர் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக எந்த திரைப்படத்திலோ, விளம்பரத்திலோ நடிக்கவில்லை.

ஆனால் தற்போது சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறியுள்ளவர் வருண் தவானோடு இந்தியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிகிச்சைக்குப் பிறகு சமந்தா பேமிலி மேன் இயக்குனர் ராஜ் & டி கே இயக்கத்தில் அமேசான் பிரைம் தயாரிக்கும் ‘சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பை அமேசான் பிரைம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தனது கட்டுடலை சிறப்பாக பேணிவரும் நடிகை சமந்தா, இப்போது உடல்நலம் சரியானதும் மீண்டும் ஜிம்மில் கடினமான வொர்க் அவுட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.