ஆசிரியரால் சிறுவனுக்கு பாலியல் தொல்லை!

Filed under: தமிழகம் |

ஆசிரியர் ஒருவர் 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரபு ஆசிரியராக பணியாற்றிய சாகுல் அமீது மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கிற்கு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் சிவகங்கை போக்சோ நீதிமன்றம், ஆசிரியர் சாகுல் அமைதற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.