ஆடியோ மூலம் மக்களிடம் பேசும் முதலமைச்சர் ஸ்டாலின்!

Filed under: அரசியல்,தமிழகம் |

நாட்டு மக்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆடியோ மூலம் பேச போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம், 2024ம் ஆண்டு முடிய போகிற பாஜகவின் ஆட்சி எப்படி எல்லாம் இந்தியாவை உருக்குலைத்து இருக்கிறார்கள் என்று பேசப்போகிறேன். எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்பும் சமத்துவ சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும் என்பதை பேசப்போகிறேன். ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா என்ற தலைப்பில் தெற்கிலிருந்து வரும் குரலுக்காக காத்திருங்கள்.” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த ஆடியோ ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி நாடு முழுதும் ஒலிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் கேள்வி பதிலாக பல்வேறு விஷயங்களை வீடியோ வடிவில் பகிர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.