ஆட்டோ டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்!

Filed under: இந்தியா |

ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு நேற்று மாலை வாங்கிய லாட்டரியில் இன்று ரூ.25 கோடி பரிசு கிடைத்துள்ளது. அவரும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி சிறப்பு லாட்டரி சீட்டு குலுக்கல் இன்று நடைபெற்றது. இக்குலுக்களில் 30 வயதான ஆட்டோ டிரைவர் அனுப் என்பவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு ரூபாய் 25 கோடி கிடைத்துள்ளது. இதையடுத்து அரசு சார்பில் நடத்தப்பட்ட லாட்டரியில் தனது 25 கோடி பரிசு கிடைத்ததற்காக ஆட்டோ டிரைவர் மகிழ்ச்சியடைந்துள்ளார். இதுபற்றி அவர் கூறம் போது, “நேற்று மாலை தான் இந்த லாட்டரி டிக்கெட் வாங்கினேன். 25 கோடி ரூபாய் பணத்தை வைத்து என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. குடும்பத்தாருடன் கலந்து பேசி முடிவு செய்வேன்” என்று கூறினார். அவருடைய அதிர்ஷ்டத்தை எண்ணி அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.