ஆத்தூர் அருகே பரபரப்பு!

Filed under: தமிழகம் |

ஊட்டச்சத்து மாத்திரை சாப்பிட்ட 50 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் ஆத்தூர் அருகே நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆத்தூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று அரசு அதிகாரிகள் ஊட்டச்சத்து மாத்திரைகளை வழங்கினர். இம்மாத்திரைகளை சாப்பிட்ட மாணவிகள் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் 50 மாணவிகளுக்கும் மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஊட்டச்சத்து மாத்திரை சாப்பிட்ட 50 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட தகவல் அப்பகுதியில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.