ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சென்னை ஐஐடி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை ஐஐடி வளாகத்தில் அவ்வப்போது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பக் ஸ்ரீசாய் என்பவர் சென்னை ஐஐடியில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. மாணவர் புஷ்பாக் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.