ஆன்லைன் சூதாட்டத்தால் பலியாகும் உயிர்கள்!

Filed under: தமிழகம் |

ஆன்லைன் சூதாட்டத்தில் கடந்த பத்து மாதங்களில் 24வது தற்கொலை நடந்தேறி உள்ளது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆன்லைன் சூதாட்டத்தால் நிகழ்ந்துள்ள தற்கொலைகள் குறித்து பேசும்போது, “சென்னை மணலியைச் சேர்ந்த நடராஜ் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடனாளி ஆனதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடராஜின் தற்கொலை ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்ட பிறகு கடந்த 10 மாதங்களில் நிகழ்ந்துள்ள 24-ஆவது தற்கொலை. ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த இரண்டு வாரங்களில் நிகழ்ந்த மூன்றாவது உயிரிழப்பு. ஆன்லைன் சூதாட்டங்கள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டியது எவ்வளவு அவசியம். ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை பிறப்பிப்பது குறித்து பரிந்துரைக்க வல்லுனர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அக்குழுவின் அறிக்கையை திட்டமிட்டபடி ஒரு வாரத்திற்குள் பெற்று உடனடியாக அவசர சட்டத்தை பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்.