தமிழக தலைமைச் செயலாளரின் பதவிக்காலம் மூன்று மாதம் நீட்டிப்பு!

Filed under: தமிழகம் |

கொரோனா வைரஸ் காரணத்தினால் தமிழக அரசின் வேலைகள் எதுவும் தடைபடாமல் இருப்பதற்காக தமிழக தலைமைச் செயலாளரான சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தலைமைச் செயலராக பதவி ஏற்ற சண்முகத்தின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது. இதனால் மூன்று மாதம் அக்டோபர் வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் ஊரடங்கு சமயத்தில் தமிழக அரசின் வேலைகள் எதுவும் தடையில்லாமல் நடப்பதற்காக சண்முகத்தின் பதவிக்காலம் மேலும், மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் வரும் ஜனவரி மாதம் வரை வேலை பார்ப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.