ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் சேர்க்கைக்கு நாளை கடைசி நாள்!

Filed under: தமிழகம் |

கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு நாளையுடன் கடைசி நாள் என்பதால் அரசு கல்லூரிகளில் சேர்வதற்காக மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பிளஸ் டூ, சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து கல்லூரிகளில் விண்ணப்பம் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. ஏற்கனவே 5 நாள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நாளையுடன் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பொறியியல் கல்லூரியில் 2 லட்சத்து 5 ஆயிரம் பேர்களும், கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 2 ஆயிரம் பேர்களும் விண்ணப்பித்துள்ளனர். நாளையுடன் அவகாசம் முடிவடைய உள்ளதால் அனைத்து கல்லூரிகளிலும் மாணவ மாணவிகளின் கூட்டம் நிரம்பி வருகிறது.