ஆளுநர் மத்திய அரசின் Nominee?

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழக ஆளுனர் ரவிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இது குறித்து உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழக ஆளுனருக்கு எதிராக மனு தாக்கலுக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் தொடங்கியது. அப்போது, சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், சட்டப்பேரவைக்கு திரும்ப அனுப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற அனுப்பினால் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரமில்லையே என்று தெரிவித்துள்ளார். இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில், “மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதபட்சத்திலும் பணமசோதாவாக இல்லாத பட்சத்திலும் அவற்றை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும். பஞ்சாப் ஆளுனர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. மீண்டும் நிறைவேற்றி அனுப்பட்ட மசோதாவை ஆளுனர் ஜனாதிபதிக்கு அனுப்ப முடியாது’’ என்று கூறியது. இதற்கு தலைமை நீதிபதி, “ஆளுநருக்கு சட்டத்தை செயலிழக்க வைக்கவோ, முடக்கி வைக்கவோ அதிகாரம் இல்லை எனக் கூறியதை அடுத்து, குடியரசுத் தலைவர் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுபவர். அவருக்கான அதிகாரங்கள் விரிவானது. ஆனால், ஆளுநர் மத்திய அரசின் Nominee என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இப்பிரச்சனைக்கு ஆளுனரே தீர்வு காணவேண்டும். இல்லையென்றால் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்’’ என்று தலைமை நீதிபதி எச்சரித்துளார்.